'சரவணா': உரிமையாளர்களுக்கு முன்ஜாமீன் இல்லை, எந்த நேரமும் கைது?
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடையின் மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கடையின் உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இன்று விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீயணைப்புத் துறையினரின் விசாரணை இன்னும் முடியவில்லை. கட்டடத்தில் விதிமீறல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வக்கீல் கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி ரகுபதி, சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் விதி மீறல் நடந்திருப்பது ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.எனவே முன்ஜாமீன் வழங்க இயலாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications