என்.கே.கே.பி. ராஜாவின் 3 கூட்டாளிகளுக்கு முன்ஜாமீன் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பதவியிழந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் கூட்டாளிகள் 3 பேருக்கு அளித்த முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி தம்பதியினருக்குச் சொந்தமான பரம்பரை நிலத்ைத பறிப்பதற்காக அவர்களையும், அவர்களது மகனையும் கடத்தி மிரட்டி சொத்துக்களைப் பறிக்க முயன்றதாக ராஜா சர்ச்சையில் சிக்கினார்.

இதுகுறித்து தொடரப்பட்ட ஹேபியஸ்கார்பஸ் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து ராஜா பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ராஜாவின் கூட்டாளிகளான பி.எஸ்.சுந்தர் ராஜ், சம்பத்குமார், சுந்தரம் ஆகியோருக்கு ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

திருட்டுத்தனம் ...

இந்த நிலையில் 3 பேருக்கும் அளித்த முன்ஜாமீனை தற்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதுகுறித்து நீதிபதி ஆர்.ரகுபதி பிறப்பித்த உத்தரவில், இந்த நீதிமன்றத்ைத ஏமாற்றி, தந்திரமான முறையிலும், மோசடியான தகவல்களைத் தெரிவித்தும் இந்த முன்ஜாமீன் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்டுள்ளது என்பதை விட பறிக்கப்பட்டுள்ளது என்பதே சரியான பதமாகும்.

எனவே இந்தி ய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 439(2)ஐப் பயன்படுத்தி, மூன்று பேருக்கும் அளிக்கப்பட்ட முன்ஜாமீன் திரும்பப் பெறப்படுகிறது. உடனடியாக 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறதுஎன்றார் நீதிபதி ரகுபதி.

முன்னதாக பழனிச்சாமியும் அவரது சகோதரர் குகமணியும், முன்ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரி மறு ஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், முன்னாள் அமைச்சர் ராஜாவின் உத்தரவின் பேரில்தான் நாங்கள் கடத்தப்பட்டோம். ஆனால் போலீஸார் ராஜா உள்ளிட்டோர் மீது ஜாமீனில் வெளி வரக் கூடிய சாதாரண வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த உண்மைகளை கோர்ட்டுக்குத் தெரிவிக்காமல் மறைத்து விட்டு 3 பேரும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். எனவே இதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதையடுத்து 3 பேர் மீதான புகார்களைப் பரிசீலனை செய்த நீதிபதி ரகுபதி, முன்ஜாமீனை திரும்பப் பெறும் உத்தரவைப் பிறப்பித்தார்.

தனது தீர்ப்பின்போது மேலும் அவர் கூறுகையில், தற்போது எனக்கு அளிக்கப்பட்ட தகவல்களைப் பரிசீலித்த பின்னர் ஆகஸ்ட் 5ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறுவதே சரியான செயலாகும் என்றார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 23 பேர் முன் ஜாமீன் கோரி நீதிபதி ரகுபதி விசாரணை நடத்த வரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கும் முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என்று கோரி பழனிச்சாமியும், குகமணியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+