சொத்து வரி வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா மனு
சென்னை: தனக்கு எதிரான சொத்து வரி வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 1993-94ம் ஆண்டுகளில் சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறி வருமானத் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். மேலும் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை நீதிபதி மோகன்ராம் விசாரித்து வருகிறார்.
தனது மேல் முறையீட்டில், எனக்கு எதிராக சொத்து வரி உதவி ஆணையர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். ஆனால் வருமானத் துறை சுட்டிக் காட்டிய 12 ஆவணங்கள் அதில் இணைக்கப்படவில்லை. இதனை எழும்பூர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் எனக்கு சம்மன் அனுப்பியது. இது சட்டப்படி தவறு.
30.6.97ல் எனது சொத்தை மதிப்பீடு செய்த வருமானத் துறையினர் ரூ.1,91,993 வரி செலுத்தும்படி கூறியது. ஆனால் 30.8.97ல் நடைபெற்ற சொத்து மதிப்பில் எனக்கு ரூ.24 லட்சம் கடன் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் எவ்வாறு சொத்து வரி செலுத்த முடியும். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications