ரமளான் நோண்புக்காக மின் தடை நேரத்தில் மாற்றம்: பொன்முடி
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரமளான் நோன்புக்கு இடையூறாக இருப்பதால் முஸ்லிம்களின் வேண்டுகோளை ஏற்று மின்தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், நண்பகல் 3 மணி முதல் 6 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையுமான 5 மணி நேர மின்தடை அமலில் உள்ளது.
முஸ்லிம் மக்கள் இந்த மின்தடை நேரம் நோன்புக்கு இடையூறாக இருப்பதாக கூறி இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மின்வெட்டு நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக பொன்முடி அறிவித்தார்.
இதன்படி அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரையும், இரவு 9 மணி முதல் 10 மணிவரையும் மின்வெட்டு இருக்காது. அதற்கு பதிலாக நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும். பகலில் 3 மணி முதல் 6 மணிவரையிலான மின்வெட்டு பகல் 2 மணி முதல் 5 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு நேர மாற்றம் மின்துறை அமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்முடி தெரிவித்தார்.
முஸ்லிம்களின் நோன்புக்கு வசதியாக மின்வெட்டு நேரம் மாற்றி அமைக்கப்பட்டதற்கு விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஐமாஅத் பாராட்டு தெரிவித்துள்ளது.
அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ், கே.எம்.ஷேக்தாவூத், எம்.கே.ஷாகுல்அமீது உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications