கோவில் விழாவில் மோதல்-காவல் நிலையம் முற்றுகை
அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நல்லமாடசாமி கோவில் கொடை விழா சாமி ஊர்வலத்தின்போது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
கல்லிடைகுறிச்சி குறிஞ்சிபாறை தெருவில் உள்ள நல்லமாடசாமி கோயில் கொடை விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை ஆற்றில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
போக்குவரத்தை போலீசார் ஓழுங்குப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது கோட்டை தெருவை சேர்ந்த வெங்கடேஷ், சக்திவேல் ஆகியோர் ஒரு வேனில் வந்தனர்.
தீர்த்தம் எடுத்து வந்த கூட்டத்தின் அருகே வேன் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த குறிஞ்சி பாறை தெருவை சேர்ந்தவர்கள் இருவரையும் தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
வெங்கடேஷ், சக்திவேலை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டை தெருவை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தை இரவு 9 மணிக்கு முற்றுகையிட்டனர். பஸ் மறியலிலும் ஈடுபட்டனர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் அக்பர்கான் உறுதியளித்தார்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். குறிஞ்சிபாறை தெருவை சேர்ந்த 9 பேரை இது தொடர்பாக விசாரணைக்கு போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இதனால் அந்த தெருவை சேர்ந்த 100 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அடுத்தடுத்து போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டிஎஸ்பி ராஜ்மோகன் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்பிரச்சினை காரணமாக அங்கு பதட்டம் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications