பாஜக ஆட்சி அமைக்கும்: திருநாவுக்கரசர்
குளித்தலை: காங்கிரஸ் அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதன் விளைவாக, பல மாநில நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்று அக் கட்சியின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.
குளித்தலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் அரிசி வழங்கும் முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அரிசியை எல்லா மக்களும் வாங்குவதில்லை. அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.
அரிசியை மட்டும் சாப்பிட முடியாது. அதற்கு தேவையான இதர பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலையில்லா திண்டாட்டம், தீவிரவாதம், வன்முறை, என்று ஏற்கனவே பல சுமைகளை மக்கள் சுமக்கின்றனர். இந்நிலையில் ஏற்பட்டுள்ள மின் வெட்டு மக்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைகள் தேர்தலின்போது கட்டாயம் எதிரொலிக்கும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதன் விளைவாகத்தான் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற பல மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். அத்வானி பிரதமராவது உறுதி என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications