கோவிலில் பூஜை-பெண்ணுக்கு உதவ நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கோவிலில் பூஜை செய்ய அனுமதி கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், பூஜை செய்ய அந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று கலெக்டருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், போத்தம்பட்டியைச் சேர்ந்த பினியக்காள் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
துர்க்கையம்மன் கோவிலில் எனது தந்தை பூசாரியாக இருந்தார். அவர் நோய்வாய்பட்டு இருந்த தருணத்தில் நான்தான் கோவிலில் பூசைகள் செய்து வந்தேன். கடந்த 2006ம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார்.
இதையடுத்து என்னை பூஜை செய்ய கூடாது என்று கூறி வாசுதேவன் என்பவரும் சிலரும் அனுமதிக்க மறுக்கின்றனர். என்னை கோவிலில் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில், இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் பூஜை செய்ய பெண்ணை அனுமதிக்க முடியாது என்று தாசில்தார் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
பெண்கள் பூஜை செய்யக் கூடாது என்று கூறுவது விந்தையாக உள்ளது. மேலும், கடவுளின் சன்னதில் ஆண், பெண் பேதம் கூடாது. கடவுள் முன்பு அனைவரும் சமம். பெண்களும் பூஜை செய்யலாம்.
மனுதாரர் பூஜை செய்ய யாரும் தொந்தரவு தரக் கூடாது. அந்த கோவிலில் அவர் தொடர்ந்து பூஜை செய்யலாம். அதற்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications