அமிதாப் படங்களுக்கு ராஜ் தாக்கரே தடை
மும்பை: மராத்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஜெயபாச்சன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அவரது கணவர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரின் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என ராஜ்தாக்கரேவன் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி எச்சரித்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மும்பையில் நடந்த துரோனா பட புரமோஷன் நிகழ்ச்சியின்போது, பேசிய ஜெயா பச்சன், நாம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியில்தான் பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை எம்.என்.எஸ். பிரச்சினையாக்கி விட்டது. இதுகுறித்து அக்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறுகையில், பச்சன்கள் இடம் பெறும் அனைத்து தயாரிப்புகளையும், விளம்பரப் பொருட்களையும் மகாராஷ்டிர மக்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்களது மனதில் மராத்திய மக்கள் குறித்த நஞ்சுதான் உள்ளது.
ஜெயா பச்சன் மராத்தி மக்களை அவமதித்து விட்டார். எனவே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதேபோன்று அவரால் அஸ்ஸாமில் போய் பேச முடியுமா. அங்கே இந்தியில் பேசுபவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்தியை பரப்பட்டும்
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்குப் போய் அவர் இந்தியைப் பரப்பட்டும் என்றார் அவர்.
சேனா செய்தித் தொடர்பாளரும், ஜெயா பச்சனின் நெருங்கிய நண்பருமான ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராத்தும், ஜெயாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்தி போன்ற மொழியை மகாராஷ்டிர மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இங்கு பல ஆண்டுகளாக பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்படி இருக்கையில், உள்ளூர் மொழியை அவர்கள் இதுவரை கற்றுக் கொள்ளவில்லை. இதுவே மராத்தி மக்களுக்கு பெரும் அவமானமாகும் என்றார் அவர்.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications