உசிலை அருகே அம்பேத்கர் பேனர் அவமதிப்பு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே அம்பேத்கர் பேனர் அவமதிக்கப்பட்டதை அடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்காக அம்பேத்கார் உருவம் பதிக்கப்பட்ட பேனர் வைத்திருந்தனர். இதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி (25) என்பவர் பேனரில் இருந்த அம்பேத்கரின் உருவத்தை அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த பேனர் வைத்தவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களை சமரசம் செய்தனர். ராஜபாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனே அகற்றும்படி போலீஸார் உத்தரவிட்டனர்.
பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு முன்னாள் ஊராட்சி மன்றத்தில் அனுமதி பெற வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும் அங்கு அசம்பாவிதங்களை தடுக்க, போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications