மாவட்டச் செயலாளர்: என்.கே.கே.பிக்கு கல்தா?
ஈரோடு: அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட என்.கே.கே.பி.ராஜா, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் சாமிநாதன் மாவட்ட செயலாளராக கூடும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னாள் தமிழக கைத்தறி அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா மீது நில மோசடி, மற்றும் ஆள் கடத்தல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து என்.கே.கே.பி.ராஜா தனது இரண்டாவது மனைவி உமாவின் உறவினர்கள் மூலமாக பாஜகவில் இணையப் போவதாக தகவல் கசிந்தன. ஆனால் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், தற்போது அவர் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து வந்து விட்டதாகவும், மாவட்ட செயலாளராக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பெயர் முன்மொழியப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
ஸ்டாலினின் மனதில் திருச்சி பொய்யாமொழி இருந்த இடத்தை பிடித்து விட்டார் சாமிநாதன். ஸ்டாலின் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தவறாமல் ஆஜராகி விடுகிறார். மேலும் நெடுஞ்சாலைத்துறையையும் பிரச்சனைகள் இன்றி திறமையாக நிர்வகித்து வருகிறார். அதனால் சாமிநாதன் மீது திமுக தலைமைக்கு நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியையும் சாமிநாதனுக்கு திமுக தலைமையே முன் வந்து கொடுக்கும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ராஜாவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் கட்சிக்கு கெட்ட பெயர் வருவதோடு, திமுகவில் உள்ள சிலருக்கு பிடிப்பின்றி போய்விடும். தற்போது, நகரம், ஒன்றியம், கிளை தேர்தல்கள் நடைபெற்று வருகி்றது.
மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும்போது ராஜாவுக்கு பதில் வெள்ளகோவில் சாமிநாதனை திமுக தலைமையே களம் இறக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
ஆனால் மாவட்டச் செயலாளர் பதவியை எப்படியும் தக்க வைத்தே தீருவது என்று தீவிரமாக செல்பட்டு வருகிறாராம் ராஜா. எனவே, மா.செ. தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications