விஜயக்குமாருக்கு டிஜிபி பதவி உயர்வு-'டம்மி' பதவிக்கு மாற்றம்!

முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்து வந்த விஜயக்குமார், காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயக்குமார் தவிர டெல்லியில் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆர்.நடராஜ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி ஜெகன் சேஷாத்ரி ஆகியோரும் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் விஜயக்குமார் காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஜெகன் சேஷாத்ரி ஊர்க்காவல் படை கமாண்டண்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர 9 ஐஜிக்களும், ஒரு கூடுதல் டிஜிபியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக இருக்கும் ஐஜி சைலேந்திர பாபு, சென்னை சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
தலைமையிடத்து ஐஜியாக இருக்கும் ஆர்.சி. குடவாலா, வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அப்பதவியில் தற்போது இருந்து வரும் கே.ராதாகிருஷ்ணன், கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிவில் சப்ளைஸ் கூடுதல் டிஜிபியாக ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகிப்பார்.
போலீஸ் பயிற்சிப் பிரிவு ஐஜியாக உள்ள ராஜேந்திரனும் கூடுதல் டிஜிபியாக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை விஜயக்குமார் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளைஸ் சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த விபாகர் சர்மா, போலீஸ் வீட்டு வசதிக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி ஜே.கே.திரிபாதி தலைமையக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆயுதப் படை ஐஜி ராஜேந்திரன், பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜி சஞ்சய் அரோரா, ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி போலீஸ் ஆணையராக இருந்த பிரமோத் குமார், கோவை மேற்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதிரடிப்படை ஐஜி அலெக்சாண்டர் மோகன், திருச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிறப்பு புலனாய்வு ஐஜி ராஜா, தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை துணை கமாண்டண்ட் ராதாகிருஷ்ணன், போலீஸ் பயிற்சி ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications