புதுவையில் குண்டர் சட்டம்: அமைச்சர் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகளும், தீவிரவாதிகளும் புதுச்சேரிக்கு வருவதால் இங்கு கொலை, கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புதுசேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற குண்டர் சட்டம் அவசியம் தேவை. தற்போது முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. குண்டர் சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
புதுச்சேரியில் ரூ.354 கோடி நிதி பற்றாக்குறை இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறேன்.
எதிர்க் கட்சியை எதிரியாக கருதப்படுவதாக புதுச்சேரி கம்யூனிஸ்ட் தலைவர், ஜனாதிபதிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டுமானால் இவ்வாறு நடந்து கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எதிர்க்கட்சியினருக்கு புதுச்சேரி அரசு எந்த ஒரு சலுகையும் தரக் கூடாது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications