பீகாரில் படகு கவிழ்ந்தது: 40 பேர் பலி?

Subscribe to Oneindia Tamil

ஷெய்க்புரா: பீகார் மாநிலத்தில் ஹரோஹர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதி்ல் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பீகார் மாநிலம் ஷெய்க்புரா மாவட்டத்தில் ஹரோரா ஆறு உள்ளது. பனபூரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்குள்ள கோவிலில் கர்மபூஜை முடித்து, சிவன், பார்வதி சிலைகளை கரைப்பதற்காக 40 பேர் படகில் சென்றனர். ஆற்றில் கட்குஸும்பா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று படகு கவிழ்ந்தது. படகில் இருந்து அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதுவரை யாரும் மீட்கப்படவில்லை. உடல்களும் கிடைக்கவில்லை. படகில் சுமார் 40 பேர் சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+