புரோட்டான் சோதனை: எந்த ஆபத்தும் இல்லை-கலாம்

டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கலாமிடம், இந்த சோதனையால் பிளாக் ஹோல் உருவாகும் என்ற அச்சம் பரப்பப்படுகிறதே என்று கேட்டதற்கு,
இந்த சோதனை அடுத்தகட்ட மனித வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமானது. இதனால் பூமிக்கோ மனிதர்களுக்கோ எந்த கெடுதலும் இல்லை.
Big Bang மூலம் தான் யுனிவர்ஸ் தோன்றியதா, நமது யுனிவர்ஸ் ஏன் இந்த ரூபத்தில் உள்ளது என்பது குறித்த கேள்விகளுக்கு விடை தேடி நடத்தப்படும் சோதனை இது.
நான் சமீபத்தில் ஜெனீவா சென்றபோது இந்தச் சோதனை நடக்கும் CERN மையத்துக்கும் சென்றேன். அதன் ஆராய்ச்சிகள் குறித்து கேட்டறிந்தேன். அங்கு நடக்கும் ஆராய்ச்சி பாதுகாப்பானது, பயப்படத் தேவையில்லை.
பிங் பேங்கின்போது எவ்வளவு சக்தி உருவாகியிருக்கும் என்பதை தோராயமாகக் கணக்கிட இந்தச் சோதனை உதவும். நமது காஸ்மோஸ் குறித்த பல அடிப்படை கேள்விகளுக்கு விடை தேடித்தான் புரோட்டான்களை சிதறடித்து சோதித்துப் பார்க்கிறார்கள். இதன் முடிவுகள் மிக இன்ட்ரஸ்டிங்காக இருக்கப் போகின்றன.
இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் நம் வாழ்க்கைத் தரத்தைத் தான் உயர்த்தப் போகின்றன என்றார்.
சோதனையில் இந்திய விஞ்ஞானிகள்:
இந்தச் சோதனையில் இந்தியாவைச் சேர்ந்த 20 விஞ்ஞானிகளும் நேரடியாக பங்கெடுத்துள்ளனர். மேலும் Large Hardron Collider (LHC) கருவிக்கான சில பாகங்களையும் இந்தியா வழங்கியுள்ளதோடு, அதில் அதி குளிரில் இயங்கும் மி்ன் காந்தங்களை வடிவமைக்கவும் உதவியுள்ளது.
ஜெனீவாவில் 20 இந்திய விஞ்ஞானிகளே நேரடியாக சோதனையில் பங்கெடுத்தாலும் இந்த ஆராய்ச்சிகான பல்வேறு நிலைகளில் டாடா இன்ட்டியூட் ஆப் பன்டமண்டல் ரிசர்ச்சைச் சேர்ந்த 100 பேர் உள்பட இந்திய விஞ்ஞானிகள் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீதியில் இளம்பெண் தற்கொலை:
இதற்கிடையே உலகம் அழியப் போகிறது என்ற பீதியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிஹாரிலால் என்பவரின் மகள் சாயா (16) பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந் நிலையில் இந்த சோதனை குறித்து தேவையில்லாமல் பீதி கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்ட இந்தியா டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications