வைக்கோல் லாரியுடன் கடை எரிந்து ரூ.7 லட்சம் சேதம்!

சங்கரன்கோவில் அருகேயுள்ள வாசுதேவநல்லூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்திற்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 2 மணியளவில் லாரியை புளியரை நெடுத்தெருவை சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டி சென்றார். புளியரை சோதனைச் சாவடி அருகே லாரி சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீயினால் லாரி மற்றும் அதில் இருந்த வைக்கோல்கள் கொளுத்துவிட்டு எரிந்தன.
தகவல் கிடைத்ததும் புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
செங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தளவுக்கு தீ கொளுத்துவிட்டு எரிந்தது. இதன்பின்னர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு நிலைய வீரர்களாலும் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் லாரி மற்றும் வைக்கோல் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வைக்கோல் எரிந்து அவற்றின் கரித்துகள்கள் காற்றில் பறந்து அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் கூரைகளின் மீது படிந்து கிடந்தன.
மேலும் அப்பகுதியில் கடை நடத்தி வந்த தங்கம்மா என்பவரது பெட்டிக்கடையும் தீயில் எரிந்து நாசமானது. லாரி, கடை உள்பட மொத்த சேத மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications