என்.டி.ஆர். மகன் பாலகிருஷ்ணா அரசியல் பிரவேசம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தால் கலக்கமடைந்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவூட்டும் வகையில், தெலுங்கு தேசத்தை நிர்மானத்த என்.டி.ஆரின் மகனும், சந்திரபாபு நாயுடுவின் சம்பந்தியும், நடிகருமான என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவும் அரசியலில் நுழைந்துள்ளார்.

இதுவரை ஆந்திர அரசியலில் காங்கிரஸும், தெலுங்கு தேசமும் மட்டுமே ஏக போக சக்திகளாக விளங்கி வந்தன. தற்போது இருவருக்கும் உலை வைக்கும் வகையில் (அதாவது தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை மிரட்டிக் கொண்டிருக்கும் தேமுதிக போல) சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் வந்துள்ளது.

சிரஞ்சீவிக்கு எங்கே கூட்டம் சேரப் போகிறது என்றுதான் இந்த இரு கட்சிகளும் நினைத்துக் கொண்டிருந்தன. ஆனால் சிரஞ்சீவி கட்சி தொடக்க விழாவுக்காக திருப்பதியில் திரண்ட கூட்டம் ஆந்திர அரசியல் தலைவர்களை பீதி அடைய வைத்துள்ளது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு பெரும் கலக்கமடைந்துள்ளார்.

எங்கே அடுத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற தனது கனவில் சிரஞ்சீவி மண்ணை அள்ளிப் போட்டு விடுவாரோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியிலும் அதே நிலைதான்.

இதனால் சிரஞ்சீவி தடுப்பு நடவடிக்ைககளில் அத்தனை கட்சிகளும் இறங்கியுள்ளன. தெலுங்கு தேசம் தரப்பில் என்.டி.ஆரின் மகன்கள் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணா ஆகியோரை தன் பக்கம் ஆதரவாக இழுத்துள்ளார் நாயுடு. இதுதவிர ஹரிகிருஷ்ணாவின் மகன்களான ஜூனியர் என்.டி.ஆர்., கல்யாண் ராம் ஆகியோரையும் தனது பக்கம் இழுத்துள்ளார்.

நான்கு பேரும் யுவ கர்ஜனை என்ற பெயரில் மிகப் பெரிய மாநாடு ஒன்றில் தோன்றி தெலுங்கு தேசத்திற்காக ஆதரவு திரட்டவுள்ளனர்.

அதன் முதல் கட்டமாக, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளார் பாலகிருஷ்ணா. இவர் நாயுடுவின் மைத்துனர் மட்டுமல்ல, அவரது சம்பந்தியும் கூட. நாயுடுவின் மகனைத்தான், பாலகிருஷ்ணாவின் மகள் மணந்துள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தனது தந்தையுமான என்.டி. ராமாராவ் போல் திரையுலகின் வழியாக அரசியலுக்கு வந்துள்ள இவர், தனது தாய் பசவதாரகம் பெயரில் பிரமாண்ட அளவில் அன்னதானம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதியில் குண்டூரில் நடைபெற உள்ள தெலுங்குதேசம் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க போவதாகவும் நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

சிரஞ்சீவி புயலை, என்.டி.ஆர் வாரிசுகளை வைத்து நாயுடு திறம்பட சமாளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஆந்திராவில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+