சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு - லஞ்சப் பணம் சிக்கியது
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று அதிரடி ரெய்டு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். இதனால் நேற்று கல்யாணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன. இதனால் சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலப்பதிவு, கல்யாணப் பதிவு உள்ளிட்டவற்றுக்காக பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல், ஓசூர், திருவாரூர், பாபநாசம், மேட்டூர், திருச்செங்கோடு, மதுக்கரை, ஊட்டி உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடந்தது.
இங்குள்ள ஊழியர்கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக் குவிப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று பெரும் கூட்டம்கூடியதால் பெருமளவில் லஞ்சம் வாங்கப்படலாம் என்பதை மனதில் வைத்தே நேற்று ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் பாபநாசம் அலுவலகத்தில் 14,780 ரூபாய் பணம் சிக்கியது. மேட்டூரில் 14,245 ரூபாயும், திருச்செங்கோட்டில் 17 ஆயிரம் ரூபாயும் சிக்கின.
ஓசூரில் 7 ஆயிரத்து 650 ரூபாயும், கங்கல் அலுவலகத்தில் 11 ஆயிரத்து 160 ரூபாயும் சிக்கின.
அதிகபட்ச அளவாக மதுக்கரையில் 58 ஆயிரத்து 345 ரூபாய் பணம் கிடைத்தது. இதையடுத்து அந்த அலுவலக சார்பதிவாளர் கமலம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதவிர திண்டிவனம் உள்ளிட்ட இடங்களிலும் மாலையில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. விருத்தாச்சலத்தில் சோதனை நடத்தப்பட்டபோது அங்கு மின்சாரம் கட் ஆனது. இருந்தாலும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு சோதனையைத் தொடர்ந்தனர் அதிகாரிகள்.
லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அதிரடி ரெய்டால் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ரெய்டு காரணமாக பதிவுகள் பாதிக்கப்பட்டதால், முகூர்த்த நாளில் இப்படி ரெய்டு நடத்தியதை அபசகுனமாக கருதிய மக்கள் அதிருப்தியடைந்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications