Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் பயங்கர குண்டுவெடிப்பு: 18 பேர் பலி - பலர் காயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 18 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

சமீபத்தில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சூரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மாலை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் மார்க்கெட் பகுதிகள் ஆகும்.

கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ்-1, கரோல் பாக் ஆகிய மக்கள் நெரிசல் அதிகம் மிகுந்த பகுதிகளில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

கரோல் பாக் (1), கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க் (1), பாரகம்பா சாலை (1), கிரேட்டர் கைலாஷ்-1 (2), பாலிகா பஜார் (1) ஆகிய இடங்கள் குண்டுவெடிப்புக்கு ஆளான பகுதிகள்.

கிரேட்டர் கைலாஷில் ஸ்கூட்டரில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. கரோல் பாக்கில் ஆட்டோவில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. கன்னாட் பிளேஸில் குப்பைத் தொட்டியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது.

கரோல் பாக்கில் முதல் குண்டு வெடிப்பு...

முதல் குண்டு கரோல் பாக், கப்பார் மார்க்கெட்டில் மாலை 6.15 மணிக்கு வெடித்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் அருகில் உள்ள ஆர்.எம்.எல்.மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நான்காவது குண்டுவெடிப்பு கிரேட்டர்கைலாஷ் -1ல் உள்ள எம்.பிளாக் மார்க்கெட்டில் நிகழ்ந்தது. இங்கு இன்னொரு குண்டுவெடிப்பும் நடந்தது.

கரோல்பாக்கில் ஆட்டோவில் குண்டு வெடித்துள்ளது. இதில் அந்த ஆட்டோ தூக்கி எறியப்பட்டது.

6.15க்கு ஆரம்பித்த குண்டுவெடிப்புகள் 6.30 மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. குண்டுவெடிப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியன் முஜாஹூதீன் காரணம்?

இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சிமி அமைப்பின் கிளையான இந்தியன் முஜாஹூதீனே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அமைப்பு குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மீடியா நிறுவனம் ஒன்றுக்கு இ மெயில் அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.

பஞ்சாப் - ஹரியானாவில் உஷார் நிலை

டெல்லி தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் முழு அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர் நகர் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் டெல்லி முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது. தகவல் தொடர்பு சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் நிறுத்தி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+