தை 1 தமிழ் புத்தாண்டு சட்டம்: அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசு அதுதொடர்பாக சட்டசபையில் புதிய சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்து பொது நலன் வழக்குகள் புகழ் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், பொதுநல நோக்கமில்லாமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கு கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ராமசாமி. அதில், பாரம்பரியமாக சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சட்டத்தின் மூலம் இதை மாற்றுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ரஹிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து பதிலளிக்கும்படி தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications