விஜயகாந்த்தை கூட்டணிக்கு கூப்பிடவில்லை: தங்கபாலு

தனது பேட்டிகளின்போதெல்லாம் விஜயகாந்த் எனது நண்பர் என்று கூறி வருகிறார் தங்கபாலு. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு நான் அவரை ஒருபோதும் கூப்பிடவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
கோவையில் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படும் வகையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா எந்த வித உதவியும் செய்யவில்லை. ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருப்பதால் வைகோ ஏதேதோ கூறுகிறார்.
மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கும், பாதுகாப்புத்துறை ஆலோசகர் நாராயணனும் இலங்கை அதிபரை சந்தித்து விரிவாக பேசியுள்ளனர்.
இந்திய எல்லையில் மட்டுமின்றி, இலங்கை கடல் எல்லையிலும் கூட இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க ஏதுவாக அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நான் கூறவில்லை. அவர் எனது நண்பர் என்று தான் கூறினேன்.
விஜயகாந்த் மட்டும் அல்ல, சோனியா தலைமையை ஏற்கும் மதசார்பற்ற கட்சிகளை எங்கள் கூட்டணிக்கு கொண்டு செல்வது மாநில தலைவர் என்ற முறையில் என்னுடைய பணிதான். ஆனால் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்ய வேண்டியது அகில இந்திய தலைமை தான்.
தமிழக அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதை தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி முடிவை சோனியா எடுப்பார் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications