இலங்கைத் தமிழரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்
திருச்சி: க்யூ பிரிவு போலீசார் என்று கூறி இலங்கை தமிழர் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன் (26). இவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர். தற்போது லண்டனில் பணிபுரிந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு உறவினர்களை பார்க்க திருச்சி வந்தார்.
கடந்த 10ம் தேதி செந்தில்நாதன் வீட்டிற்கு வந்த மூன்று பேர், தாங்கள் க்யூ பிரிவு போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். செந்தில்நாதனின் ஆவணங்களை சரி பார்த்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, லண்டனில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ஏராளமான பணம் கொண்டு வந்துள்ளீர்கள், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களுக்கு ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்று செந்தில்நாதனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், கே.கே.நகர் போலீஸில் செந்தில்நாதன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து க்யூ பிரிவு போலீசார் என்று கூறிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications