டெல்லி குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக தப்பிய அபிஷேக்
மும்பை: டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பின்போது நடிகர் அபிஷேக் பச்சன் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது.
டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தபோது அந்த வழியாக செல்ல முயன்றுள்ளார் அபிஷேக் பச்சன். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து திரும்பி விட்டாராம். இந்தத் தகவலை அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் தனது 'பிளாக்'கில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அமிதாப் எழுதியுள்ளதாவது: கன்னாட் பிளேஸ் பகுதியில் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் அந்தப் பாதை வழியாக செல்ல முயன்றுள்ளார் அபிஷேக். ஆனால் போக்குவரத்து நெரிசலைப் பார்த்து திரும்பி விட்டார்.
ஒரு வேளை அவர் குண்டுவெடிப்புக்கு முன்பு அந்தப் பாதை வழியாக சென்றிருந்தால் நிச்சயம் குண்டுவெடிப்பில் சிக்கியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். வெடிகுண்டுச் சம்பவத்திற்குப் பின்னர் எனக்குப் போன் செய்து தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் இந்த வெடிகுண்டு சம்பவத்தால் யாருக்கு என்ன பலன் கிடைத்து விட்டது?. பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. ஒன்றும் தெரியாத பலர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர், படுகாயமுற்றுள்ளனர். இதனால் யார் என்ன சாதித்து விட்டார்கள்?.
டெல்லி குண்டுவெடிப்பு என்னை மிகவும் சோகமாக்கியது. மனதெல்லாம் வலித்தது.
நாம் எல்லாம் மிகவும் கடினமான கால கட்டத்தில் உள்ளோம். நமது வருங்காலத் தலைமுறையினருக்கு என்ன மாதிரியான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. நம்மைப் பற்றியும் நாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். அதுதான் இப்போது அனைவருக்கும் தேவையானது என்று கூறியுள்ளார் அமிதாப்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications