பணவீக்கம் மேலும் குறையும்-ரங்கராஜன் ஜோசியம்
டெல்லி: வரும் டிசம்பருக்குள் 14 சதவிகித பணவீக்கத்தை நாடு சந்திக்கும் என கடந்த மாதம் கூறிய முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர், எம்பியான கையோடு பணவீக்கம் 10 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என பேட்டியளித்துள்ளார்.
ராஜ்யசபா நியமன எம்பியாகி அரசியல்வாதியாகிவிட்டதாலோ என்னவோ மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் முன்னாள் தலைவராக இருந்த ரங்கராஜன் கடந்த மாதம் நிருபர்களைச் சந்தித்தபோது, பணவீக்கம் இனி குறைய வாய்ப்பில்லை என்றும், வரும் டிசம்பருக்குள் இன்னும் உயர்ந்து 13 முதல் 14 சதவிகிதம் வரை போகும் என்றும் சொல்லி கிலியூட்டினார்.
இந்நிலையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் அவர் நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்தியப் பணவீக்கம் 10 சதவிகிதத்துக்குள் வந்துவிடும் என நம்புகிறேன். கடந்த ஆண்டு டிசம்பரில் பணவீக்கம் சாதாரண நிலையில் இருந்தது. அதனால்தான் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே உயரத் தொடங்கிவிட்டது.
எப்போதுமே முந்தைய ஆண்டுகளில் பணவீக்கம் குறைவாக இருந்தால், நடப்பு ஆண்டு நிச்சயம் உயரும் என்பது, பணவீக்கத்தின் அடிப்படை விதி (!). இதனை அடிப்படை விளைவு என்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால், இந்த டிசம்பரில் பணவீக்கம் மீண்டும் குறையும்(!!) என்றார்.
பணவீக்கம் இந்த வாரம் 12.1 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications