ட்ராபிக் வார்டன்கள் தகராறு: விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்திலுள்ள துணி கடை ஊழியருக்கும், டிராபிக் வார்டன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள துணி கடை உள்ளது. இந்த கடையின் ஊழியர் அருண் டேனியல். விமான நிலையத்தில் டிராபிக் வார்டன்கள் ஸ்ரீகாந்த் மற்றும் சுபாஷ் ஆகியோர் அந்த துணி கடைக்கு சென்றனர். இருவரும் தலா 2 சட்டைகள் வாங்கினர். அதற்குரிய பணத்தை தராமல் இருவரும் புறப்பட்டுள்ளனர்.
சட்டைகளுக்குரிய பணத்தை தருமாறு அருண் டேனியல் கேட்டுள்ளார். அதற்கு தரமுடியாது என்று ட்ராபிக் வார்டன்கள் கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சட்டைகளை பிடுங்குவதற்கு அருண் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ட்ராபிக் வார்டன்கள் அருணை தாக்கியுள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் போலீஸில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமரசம் செய்து விசாரித்து வருகின்றனர்.
டிராபிக் வார்டன் ஸ்ரீகாந்த் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications