திமுக-பாமக சமாதான முயற்சி தோல்வி: திருமா

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக-பாமக இடையே சமாதானம் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என விடுதலை சிறுத்ததைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக போன்ற வகுப்புவாத கட்சிகள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் நடந்து கொள்வதை நிறுத்தினாலே நாட்டில் வெடி குண்டு தாக்குதல்கள் நடக்காது.

ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பொடா சட்டத்தை திரும்ப கொண்டு வருவோம் என்ற அத்வானியின் பேச்சு ஏற்புடையதல்ல.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. தீவிரவாதத்தை தடுக்க தனி சிறப்பு உளவுப் பிரிவை மத்திய அரசு அமைக்க வேண்டும். தாக்குதல் குறித்து முன்கூட்டியே முறியடிக்கும் யுக்திகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதிலும் மத்திய அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது.

இலங்கைக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவியை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி விடுதலை சிறுத்ததைகள் கட்சியின் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அண்ணாவின் கனவை நனவாக்க்கும் வகையில் அவரது பிறந்த நாளன்று ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். இதற்காக முதல்வருக்கு எனது பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

திமுக-பாமக இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். சமாதானம் செய்து வைக்கக் கோரி இரு கட்சிகளும் கேட்கவில்லை. ஆனால், நாங்களாக முன்வந்து சமாதானம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சி பயனளிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+