விபச்சாரம்: கன்னட பிரசாத் மனைவி கைது

சென்னை வளசரவாக்கம் பகுதியி்ல் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ராஜாராம் ஆகியோர் சாதாரண உடைகளில் கார்களில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எஸ்.ஐ. சிவகுமாரிடம் வந்த ஒரு வாலிபர், எனது காருக்குள் விபச்சாரப் பெண்கள் உள்ளனர். ரூ.10,000 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தார்.
இதையடுத்து தனது காரை விட்டு இறங்கி அந்த நபரின் காருக்கு சென்றார் சிவக்குமார். அங்கிருந்த பெண்களை தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை ஆழ்வார் திருநகரில் உள்ள பங்களாவுக்கு வருமாறு அழைத்தார் அந்த வாலிபர். அந்த விலாசத்தை வாங்கிக் கொண்ட எஸ்.ஐ. சிவகுமார், ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
பின்னர் போலீசாருடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டார். அந்த வீட்டுக்குள் 10 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய ஷில்பா என்ற பெண்ணை கைது செய்தனர்.
இந்த ஷில்பா, பிரபல விபச்சார தாதா கன்னட பிரசாத்தின் மனைவி ஆவார். இவருக்கு விமலா, சுதா என்ற பெயர்களும் உண்டு. ஷில்பாவின் சொந்த ஊர் பெங்களூர்.
புரோக்கர்களாக செயல்பட்ட சசின், பிரகாஷ், கிஷோர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
ஷில்பாவிடம் நடத்திய விசாரணையில் வெளி மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த பெண்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். அந்தக் கும்பலிடம் இருந்து கார், 10 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
கன்னட பிரசாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஷில்பா, குசும் உள்பட 3 மனைவிகள் உள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications