'ரூ.100 கோடி/87 லட்சம்'= >5 ரூபா..?-இது கேப்டன் கணக்கு
சென்னை: 67 ரூபாய்க்கு விற்கக் கூடிய மளிகைப் பொருட்களை 17 ரூபாய் குறைத்து 50 ரூபாய்க்கு தரப்போவதாக அரசு கூறுவது தவறான கணக்கு. இதனால் ஒரு குடும்பத்திற்கு வெறும் ஐந்து ரூபாய் கூட ஆதாயம் கிடைக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'வகுத்தல் கணக்கு' கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காந்தி பிறந்த நாளையொட்டி 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை வழங்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்ந்துவரும் வேளையில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த நோக்கம் இத்திட்டங்களின் மூலம் உண்மையில் நிறைவேறுமா? என்பதே கேள்வி. ரூபாய்க்கு கிலோ அரிசித் திட்டம் நடைமுறையில் ஏழைகளுக்கு பயன்படவில்லை என்பதும், கடத்தல்காரர்களே பயனடைவர் என்பதும் கடந்த கால அனுபவம்.
"மலிவு விலையில் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அளவுக்கு மீறி உயர்ந்துள்ளதே'' என கேள்வி எழுப்பினேன்.
"நாளொன்றுக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு குடும்பத்திற்கு உணவுப் பொருட்களின் செலவாகிறது. இதற்கு என்ன வழி?'' என்று நான் கேட்டேன்.
இப்போது, 67 ரூபாய்க்கு விற்கக் கூடிய மளிகைப் பொருட்களை 17 ரூபாய் குறைத்து 50 ரூபாய்க்கு தரப்போவதாகவும் அதனால் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், ஆண்டுக்கு அரசுக்கு 100 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் ஒரு குடும்பத்திற்கு 17 ரூபாய் மிச்சமாகாது. அரசின் மொத்த மானியமான 100 கோடி ரூபாயை பங்கிட்டால், ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு வெறும் ஐந்து ரூபாய் கூட ஆதாயம் கிடைக்காது. யானைப் பசிக்கு, இது சோளப்பொரி கூட இல்லை.
அரசு குறிப்பிட்டுள்ள மளிகைப் பொருட்களை மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்தால், ரூ.45.70க்கே பெற முடியும். அதுவும் டன் கணக்கில் கொள்முதல் செய்யும்போது, இந்த விலை மேலும் குறையும்.
வியாபாரிகளைப் போல அரசு மதிப்புக் கூட்டு வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதன்படி பார்த்தால், 50 ரூபாய்க்கு தருவது கூட அரசுக்கு ஆதாயமே தவிர நஷ்டம் அல்ல.
அப்படியிருக்க, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் இத்திட்டத்தால் கூடுதல் செலவாகும் என்பது, இதிலும் ஆளுங்கட்சியினர் சம்பாதிக்க வழி காணப்பட்டுள்ளதா?.
உண்மையிலேயே ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றால் ஆடம்பர செலவுகளையும், வீண் விரயங்களையும், லஞ்சம் ஊழலையும் அரசு தவிர்த்தாலே விலைவாசி உயர்வு பெருமளவு குறையும்.
"இத்திட்டத்தை குறைகூறுபவர்கள் மக்கள் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுவர்' என்கிறார் முதல்வர். குறைபாடே திட்டம் ஆகிவிட்டால், மக்கள் மன்றத்தில் முதல்வர் தான் அப்படி நிற்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications