ஒரிஸ்ஸா: காவல் நிலையம் எரிப்பு-போலீஸ்காரர் கொலை

சில வாரங்களுக்கு முன் கந்தமால் மாவட்டத்தில் விஎச்பியைச் சேர்ந்த சுவாமி லட்சுமானந்தாவை நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொன்றதையடுத்து ஒரிஸ்ஸாவில் பெரும் மதக் கலவரம் மூண்டது. கிருஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். பல சர்ச்சுகளும் சேதப்படுத்தப்பட்டன.
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை கோச்சபாடா என்ற இடத்தின் அருகே கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாயினர்.
இந் நிலையில் நேற்றிரவு துப்பாக்கிகள், வாள்களுடன் ஒரு கும்பல் காவல் நிலையத்தைத் தாக்கி தீ வைத்தது. அங்கிருந்த ஒரு காவலரை சுட்டுக் கொன்றது.
கோவில்கள் மீது தாக்குதல்:
இந் நிலையில் சுரேந்தர்கர்க் மாவட்டத்தில் சக்பாகல் என்ற இடத்தில் ஹனுமார் கோவிலை ஒரு கும்பல் தாக்கியது. கோவிலில் இருந்த சிலையை அந்தக் கும்பல் சேதப்படுத்தியது.
மேலும் பாலிசங்கர் என்ற இடத்தில் இன்னொரு கோவிலுக்கு ஒரு கும்பல் தீ வைக்க முயன்றது. இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியை நிலை நாட்ட அனைத்து மதத்தினர் கொண்ட குழுக்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications