ஏவுகணைத் திட்டமும் போச்சு: பாஜக புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அதன் மூலம் இந்தியாவின் ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தையும் காவு கொடுத்து விட்டார் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்தியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏவுகணைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளிறவு அமைச்சகம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கடிதங்கள் மூலம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.

இது மிகப் பெரும் ஆபத்தாகும். பல வருடங்களாக மேற்கொண்டு வரும் ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தை நாம் கைவிடுவது மிகப் பெரிய தவறான முடிவாகும்.

இதன் மூலம் அணு ஆயுத சோதனையை முடக்கி வைத்தது போல இப்போது ஏவுணைத் திட்டத்தையும் மன்மோகன் சிங் அரசு முடக்கி வைத்து விட்டது. இது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிமொழியின்படி, ஏவுணை திட்டங்களை நாம் சுதந்திரமாக செயல்படுத்த முடியாது. ராக்கெட் திட்டங்களையும் நாம் முடக்கி வைக்க நேரிடும். நம்மால் 300 கிலோ மீட்டருக்கு மேல் ஏவுகணைகளை ஏவவும் முடியாது என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+