நெல்லை-திருச்செந்தூர் ரயில் 27க்கு மாற்றம்
நெல்லை:நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகல ரயில் சேவை வரும் 26ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி 27ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து கடந்த 2006 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அடுத்த மாதமே அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.70 கோடியில் செலவில் 62 கிமீ தூரமுள்ள இந்த பாதையில் புதிதாக 194 பாலங்கள் கட்டப்பட்டன.
புதிய பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், தண்டவாளம் அமைக்கும் பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிக்கப்பட்டன. பணிகளை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சிஜேஎஸ் நாயுடு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்தார்.
அப்போது திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 120 கி.மீ. வேகத்தில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையி்ல் இந்த ரயில் சேவை வரும் 26ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது.
தற்போது இந்த விழாவை 27ம் தேதிக்கு மாற்றி அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். 26ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சரும் தொகுதி எம்பியுமான ராதிகா செல்வியின் கணவர் வெங்கடேஷ பண்ணையாரின் நினைவு தினமாகும்.
இதனால் அவரால் விழாவில் பற்கேற்க முடியாது என்று கருதப்பட்டது. இதே போல மற்ற சில விஜபிகளும் தேதியை மாற்ற பரிந்துரை செய்ததால் அனைவருக்கும் வசதியாக தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான விழா திருச்செந்தூரில் நடைபெறுகிறது. விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications