புதுவை மொழிப்போர் தியாகிகளுக்கு பென்ஷன்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் மொழிப் போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநில அமைச்சர்களுடன் டெல்லிக்கு செல்கிறேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நாங்கள் அனைவரும் வாழ்த்து பெறுகிறோம். பின்னர், புதுவையில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை குறித்து சோனியாவுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறோம். புதுவைக்கு மத்திய அரசு கொடுத்துள்ள ரூ.2,400 கோடி கடனை தள்ளுபடி செய்யுமாறு அப்போது வலியுறுத்துவோம்.

அண்ணாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விழாக் குழு விரைவில் அமைக்கப்படும்.

காந்தி ஜெயந்தியன்று சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரூ.1000த்துக்கான பரிசு கூப்பம் வழங்கப்படும். நவம்பர் முதல் தேதி ரூ.1000 பரிசு கூப்பனும் வழங்கப்படும். அதேபோல, தமிழ்நாட்டை பின்பற்றி புதுவையிலும் மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2006ல் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதி்ல் விடுபட்டவர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு சார்பில் ரூ.13 கோடியும் கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.2 கோடியும் கடன் தள்ளுபடி செய்யப்படும். இது குறித்த பயனாளிகளின் பட்டியல் அக்டோபர் முதல் தேதி வெளியிடப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+