கர்நாடகம், ஒரிஸ்ஸாவுக்கு 355வது பிரிவின் கீழ் மத்திய அரசு எச்சரிக்கை

உள்நாட்டுப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் இந்தப் பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதை மாநில அரசுகள் சரியாக செயல்படுத்தத் தவறினால், அடுத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கை மத்திய அரசே நேரடியாக கையிலெடுத்துக் கொள்ள வழி வகை உண்டாகும்.
மேலும் மாநில அரசு அரசியல் சட்டப்படி செயல்படவில்லை என்று ஜனாதிபதி அடுத்தகட்ட தீவிர நடவடிக்கை கூட எடுக்க முடியும்.
நேற்று இந்த 355வது பிரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந் நிலையில் இன்றும் இரண்டாவது முறையாக மீண்டும் கடும் எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்துள்ளது.
இந்த தொடர் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கர்நாடக அரசு கொஞ்சம் அசைந்து கொடு்க்க ஆரம்பித்துள்ளது. இந்தக் தாக்குதல்களுக்கு பஜ்ரங் தள் அமைப்பு நேரடியாகப் பொறுப்பேற்றும் கூட அதன மீது கர்நாடகம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.
தாக்குதல்களை விட்டுவிட்டு மதமாற்ற விவகாரம் குறித்து பேசி பிரச்சனையை மேலும் பூதாகரமாக்கி வந்தார் முதல்வர் எதியூரப்பா. இந் நிலையில், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள பஜ்ரங் தள் அமைப்பை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சாரியா கூறியுள்ளார்.
விஎச்பியும் பஜ்ரங் தள்ளும் ஒரிஸ்ஸா, கர்நாடக மாநில அரசுகளின் உதவியோடு தான் கிருஸ்துவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன என மத்திய அரசுக்கு உளவுப் பிரிவு கொடுத்துள்ள தகவலைத் தொடர்ந்து 355வது பிரிவை கையில் எடுக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அப்படியும் பஜ்ரங் தள்ளையும் விஎச்பியையும் கட்டுப்படுத்த இரு மாநில அரசுகளும் தவறினால் 356வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications