டெல்லியில் என்கெளன்டர்: தீவிரவாதி உள்பட 2 பேர் பலி!
டெல்லி: தெற்கு டெல்லியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீஸார் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.
ஜாமியா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான ஆதிக் என்பவர் டெல்லி மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி சிறப்புப் பிரிவு இணை ஆணையர் கர்னைல் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அபு பாஷர் நேற்று குஜராத் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு வரவழைக்கப்பட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையின்போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.
ஜாமியா நகரில் உள்ள ஒரு மசூதி அருகே இருக்கும் நான்கு மாடிக் கட்டடத்தில் ஆதிக் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அவன் தெரிவித்தான்.
கடந்த ஜூலை மாதம் இங்குதான் பாஷரும், இந்தியன் முஜாஹிதீன் தலைவரான தெளகீர் எனப்படும் முகம்மது சுபான் குரேஷியும் தங்கியிருந்ததாகவும் பாஷர் தெரிவித்திருந்தான்.
ஆதிக்குக்கு டெல்லி மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு உள்ளது.
ஆதிக் மற்றும் இன்னொரு தீவிரவாதி தங்கியிருப்பது குறித்து தெரிய வந்ததும் அங்கு போலீஸ் படை விரைந்தது. மோகன் சந்த் சர்மா தலைமையிலான போலீஸ் படை அங்கு பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க முயன்றது.
அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் ஆதிக் உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவன் பிடிபட்டான். மற்ற இருவர் தப்பி விட்டனர்.
இந்த என்கெளன்டரில் இன்ஸ்பெக்டர் சர்மா, ஒரு ஏட்டு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சர்மாவுக்கு வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications