செஞ்சி ராமச்சந்திரன், எல்.ஜி எம்.பி பதவி பறிப்பு?
டெல்லி: லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த சர்ச்சையில் சிக்கியுள்ள எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தங்களது எம்.பி. பதவியை இழப்பார்கள் எனத் தெரிகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு மெஜாரிட்டி பலத்தை நிரூபிப்பதற்காக பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில், போட்டி ம.தி.மு.க.வை சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், எல்.எணேசன் இருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த ஓட்டெடுப்பின்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்,கட்சி கட்டுப்பாட்டை மீறி அரசுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். இது தொடர்பான புகார்கள் மீது சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி விசாரணை நடத்தி பதவி பறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளைச் ேசர்ந்த சில எம்.பிக்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போட்டி மதிமுகவின் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் பதவிகளும் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
தங்களுக்கு எதிரான புகார் தொடர்பாக போட்டி ம.தி.மு.க.வை சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரனும் எல்.கணேசனும் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து விளக்கம் அளித்தனர். எல்.கணேசன்தான் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் என்றும், அவர் பிறப்பித்த உத்தரவை ம.தி.மு.க. எம்.பி.க்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ணன் இருவரும் மீறிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேபோல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோரும் சபாநாயகரை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
பின்னர் டெல்லியில் நிருபர்களை சந்தித்த எல்.கணேசன், இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு தங்கள் தரப்பு எம்.பி.க்கள் இருவரும் கட்டுப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், லோக்சபா தேர்தலுக்கு முன்பு பெரும் திரளான தொண்டர்ளுடன் திமுகவில் இணையப் போகிறார்களாம் எல்.கணேசனும், செஞ்சியாரும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications