விடுதலை கோரும் பிரேமானந்தா மனு: அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்க கோரும் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இதுகுறித்து பிரேமானந்தா தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1993ம் ஆண்டு புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றம் எனக்கு இரட்ைட ஆயுள் தண்டனையும், ரூ. 35 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டன.
அன்று முதல் கடந்த 15 வருடங்களாக நான் சிறையில் வாடி வருகிறேன். சமீபத்தில் அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
எனவே எனக்கும் மன்னிப்பு அளித்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கை 1045 ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications