மேலும் 6 மாதம் மின்வெட்டு தொடரும்-ஜெய்ராம்
சென்னை: தமிழகத்தில் மின் வெட்டு மேலும் 6 மாதங்களுக்குத் தொடரும் என மத்திய மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். இன்னும் 6 மாதத்துக்கு மின் தட்டுப்பாடு தொடரும்.
புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின், படிப்படியாக மின் தட்டுப்பாடு குறையும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில், வரும் மார்ச் மாதத்துக்குள் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கிவிடும்.
நெய்வேலியில் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பதிலாக, 180 மெகாவாட் மின்சாரமும், கைகாவில் 660 மெகாவாட்டுக்கு பதிலாக 350 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
நெய்வேலியில் கூடுதல் நிலக்கரி சுரங்கம் அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம்.
எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களும் அவற்றின் திறனுக்கு ஏற்ற அளவு மின்சாரம் தயாரிப்பதில்லை. காரணம் எரி வாயு பற்றாக்குறை தான். ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிப்பதை ரிலையன்ஸ் நிறுவனம் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் மூலம் யுரேனியம் தங்கு தடையின்றி கிடைக்கத் தொடங்கிவிடும். அதன் பின்னர் அணு மின் நிலையங்களில் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடக்கும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications