ஓமன் சிறையில் 40 இந்திய பெண்கள்-விபச்சார புகாரில் அடைப்பு!
மஸ்கட்: விபச்சாரம் உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்ட கேரள நர்சுகள் உள்ளிட்ட 40 இந்தியப் பெண்கள் ஓமன் நாட்டு சிறையில் வாடி வருகின்றனர்.
ஓமன் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலான பெண்கள் நர்ஸ் வேலை பார்ப்பவர்கள்.
இந் நிலையில் மஸ்கட், ருவி உள்பட பல்வேறு நகரங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனை நடந்தது. அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்து 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. விபசார விடுதிகள் நடத்தி வந்ததாகவும், விசா இல்லாமல் தங்கி இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைதானவர்களில் 90 பேர் இந்தியர்கள். இவர்களில் 40 பேர் பெண்கள். 50 நாட்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விபசார வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த 40 பெண்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் சட்டப்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் விசா வழங்கப்பட வேண்டும்.
இருப்பினும் போலியான வயதுச் சான்றிதழைக் காட்டி, ஏஜண்டுகளுக்கு அதிக பணம் கொடுத்து இவர்கள் ஓமன் நாட்டுக்கு வந்துள்ளனர். இப்போது கடல் கடந்து வந்து சிறையில் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications