நீதிமன்றத்திலிருந்து சுபாஷ் பண்ணையார் தப்பியோட்டம்
நெல்லை: பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் என்ற சுபாஷ் பண்ணையார்.
கடந்த 2006ம் ஆண்டு எப்போதும்வென்றான் அருகே தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது தொடர்பாக எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது.
இது தவிர ஆறுமுகநேரி, ஆத்தூர் காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சுபாஷ் பண்ணையார் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சுபாஷ் பண்ணையார் 2வது செசன்ஸ் கோர்ட்டில் சரணடைந்தார். அவருக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கிய நீதிபதி சரவணன், ஜெசிந்தா பாண்டியன் கொலை வழக்கில் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சுபாஷ் பண்ணையார் நெல்லை குற்றவியல் 3ம் எண் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் திடீரென தப்பியோடிவிட்டார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோர்ட் ஊழியர் சுந்தர்ராஜ் என்பவர் பாளை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தப்பியோடிய சுபாஷ் பண்ணையாரை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications