ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போல உளவுக்கு ஐஐஎஸ்: மோடி யோசனை

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. எனவே ஒருங்கிணைந்த உளவு கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். அதை தொழில்முறையில் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், போல தனியாக இந்திய உளவு பணி (ஐஐஎஸ்) என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.
இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை அடக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக பொறுமை சற்றும் இருக்கக் கூடாது. இதுதொடர்பாக மக்கள் மனதில் பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். அது இல்லாமல், நம்மால் தீவிரவாதத்தை எதிர்த்து போராட முடியாது.
மகாராஷ்டிராவில் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் அமலில் உள்ளது. அதேபோன்ற ஒரு சட்டத்ைத குஜராத் அரசு இயற்றியது. ஆனால் அதை மத்திய அரசு இன்னும் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசின் வாக்கு வங்கி அரசியலை இது அப்பட்டமாக பகிரங்கப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் இருக்கலாம், குஜராத்தில் அப்படி ஒரு சட்டம் இருக்கக் கூடாதா. உலகின் எந்த நாட்டிலும் ஒரு மாநிலத்தில் ஒரு சட்டம், இன்னொரு மாநிலத்தில் கிடையாது என்ற அவலமான நிலையை காண முடியாது.
உயிர்களை எடுக்கும் தீவிரவாதிகளை ஒடுக்கவும், கட்டுப்படுத்தவும் இதுபோன்ற சட்டம் தேவையில்லை என்று எப்படி கூற முடியும். இப்படி ஒரு சட்டம் இல்லாததால், சந்தேகப்படுபவர்களை நம்மால் விசாரிக்க முடியாமல் போகிறது. தீவிரவாதத்தை விரும்புபவர்கள்தான் இந்த சட்டத்ைத எதிர்ப்பார்கள். அதேசமயம், தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் இந்த சட்டத்ைத ஆதரிக்கிறார்கள்.
டெல்லி ஜாமியா நகரில் நடந்த என்கெளன்டரில் போலீஸார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் குறித்த தகவலை நான் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரிவித்தேன். அந்தத் தகவல் போலீஸாருக்கு உதவியுள்ளது. இந்த விஷயத்தில் அரசியல் பார்க்க கூடாது. நான் பார்க்கவும் மாட்டேன்.
குஜராத் போலீஸார், குஜராத் மாநில நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நாட்டு நலனையும் மனதில் வைத்து செயல்படுகிறார்கள். டெல்லி சம்பவம் அதை நிரூபித்துள்ளது.
முட்டாள்கள்தான் தீவிரவாதிகளை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் முரட்டுத்தனமாகத்தான் செயல்பட முடியும்.
அமெரிக்க விசா மறுப்பு ...
நான் அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பிக்கவில்லை. எனவே விசா மறுக்கப்பட்டதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை என்றார் மோடி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications