மின்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை: ராமதாஸ்

கோவை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் பெறப்படுகிறது. விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் அளவுக்கு மின்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
மின்துறைத் தலைவர், உறுப்பினர்கள் பொம்மை போல செயல்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் இரண்டு ஆண்டுகளில் மின்துறை திவாலாகிவிடும். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக் குறைக்கு பொறுப்பேற்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும்.
ரூபாய்க்கு கிலோ அரிசி, ரூ.50க்கு 10 மளிகை பொருள் திட்டங்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டவை. தேர்தல் முடிந்ததும் இவ்விரு திட்டங்களும் மறைந்துவிடும். ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம், கடத்தல்காரர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் மட்டுமே பயன்தரும். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது.
அதேபோல இலவச கலர் டிவி திட்டமும் வீணான திட்டமே. தமிழக அரசின் இணையதளத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 49 லட்சத்து 58,231 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆளுக்கொரு வேலை கொடுத்தாலே இலவச திட்டங்கள் தேவைப்படாது என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications