வடிவேலு வீடு மீது சரமாரி தாக்குதல் - 2 பேர் கைது
நடிகர் விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமீப காலமாக உரசல் ஏற்பட்டு வருகிறது. ஒருமுறை வடிவேலுவை தனது அலுவலகத்திற்குக் கூப்பிட்டு விஜயகாந்த் அடித்ததாகவும் பரபரப்பு கிளம்பியது.
சமீபத்தில், விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு போலீஸ் வரை பிரச்சினை போனது. இதுதொடர்பாக விஜயகாந்த் தரப்பைச் ேசர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நாளை வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வடிவேலு வீட்டுக்கு 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சாலிகிராமம் பகுதியில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர். பின்னர் சரமாரியாக கற்களை வீசி வடிவேலு வீட்டையும் அலுவலகத்தையும் தாக்கினர்.
இதில் கண்ணாடி ஜன்னல்கள் சரமாரியாக உடைந்தன. அந்தத் தெருவே பரபரப்பில் மூழ்கியது.
தாக்குதல் நடந்தபோது வீட்டுக்குள் வடிவேலு குடும்பத்துடன் இருந்தார். அவரால் வெளியே வரவே முடியாத அளவுக்கு தாக்குதல் பலமாக இருந்தது. பின்னர் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி விட்டது.
இந்த சம்பவம் குறித்து வடிவேலு கூறுகையில், 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.
என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.
காமெடியனுடன் மோதித்தானா நீங்கள் கோட்டையை பிடிக்க வேண்டும்? தொடர்ந்து வேண்டுமென்றே என்னை தாக்கி வருகிறார்கள். நமக்குள் வாய்க்கால் வரப்பு தகராறா இருக்கிறது? எதற்காக என்னை இம்சிக்கிறீர்கள். நான் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றார் வடிவேலு.
விஜயகாந்த் தரப்பினர்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக வடிவேலு தரப்பினர் கூறுகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் கைது...
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் அஜீத் பட ஸ்டிக்கர் இருந்ததாம். எனவே அவர்கள் அஜீத் ரசிகர்களாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
இருப்பினும் இது விஜயகாந்த் தரப்பினரின் திசை திருப்பும் செயல் என வடிவேலு தரப்பு கூறுகிறது.
இதுகுறித்து வடிவேலு தரப்பு கூறுகையில், அஜீத்துக்கும், வடிவேலுவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரை வடிவேலு தவறாகப் பேசியதில்லை. இந்த மோதலுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ைல என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல அஜீத் ரசிகர் மன்றமும், இந்த தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பு இல்ைல என திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வடிவேலு மீது நடத்தப்பட்ட தாக்குதல் சென்னையிலும்,திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications