ரிலையன்ஸ் கச்சா எண்ணெய்-எரிவாயு தயார்!
கோதாவரி: ரிலையன்ஸ் நிறுவனம் தனது கோதாவரி கடல் சுரங்கத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வினியோகிக்க ஆரம்பித்துள்ளது.
அடுத்த 18 மாதங்களுக்குள் பேரல் ஒன்றுக்கு 100 டாலர் விலை என்று வைத்துக் கொண்டாலும் ரிலையன்ஸ் உற்பத்தி செய்யவிருக்கும் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் இந்தியாவின் இறக்குமதிச் சுமை ரூ.90,000 கோடி (20 பில்லியன் டாலர்) வரை குறையும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோதாவரி-கிருஷ்ணா படுகையிலிருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெயை வணிக ரீதியாக விற்பனைக்கு வெளியிட்ட முகேஷ் அம்பானி, இது ரிலையன்ஸின் ஒரு எண்ணெய் உற்பத்தி மையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் மட்டும்தான்.
ஆனால் இன்னும் இதுபோன்ற ரிலையன்ஸின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் பல முழு வீச்சில் இயங்கத் தொடங்கும்போது உள்நாட்டுத் தேவைக்கான பெரும்பகுதியை ரிலையன்ஸே சப்ளை செய்துவிடும். நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதிச் செலவில் ரூ.90,000 கோடிவரை இதன்மூலம் மிச்சப்படுத்த முடியும்.
இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக அரசு அளித்து வந்த மானியம் முழுமையாக குறைய வாய்ப்பு உள்ளது. இந்தத் தொகையை அரசு வேறு நல்ல திட்டங்களுக்காகச் செலவழிக்க முடியும் என்றார் அம்பானி.
இப்போதைக்கு கிருஷ்ணா- கோதாவரிப் படுகையிலிருந்து தினசரி 5000 பேரல் உற்பத்தி செய்யப்படும் என்றும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இதன் அளவு 5.5 லட்சம் பேரல்களாக உயர்ந்துவிடும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications