கேரளாவுக்கு படு ஜோராக நடக்கும் அரிசி கடத்தல்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் புளியரை செக்போஸ்டில் போதுமான கண்காணிப்பு இல்லாததால் அரிசி, எரி சாராயம் போன்றவை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டம் புளியரையை அடுத்துள்ள செக்போஸ்டில் தீவிர கண்காணிப்பு இல்லாததால் இந்த வழியாக எரிசாராயம், மணல், அரிசி, கோதுமை போன்ற ரேஷன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கேரளாவுக்கு சர்வ சாதாரணமாக கடத்தப்படுகின்றன. ஹவாலா வர்த்தகமும் படுஜோராக நடந்து வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்வதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.
கலெக்டர்கள் மற்றும் வருவாய் துறையினர், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க மாநில எல்லையில் சோதனை சாவடிகளில் சிறப்பு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸாருடன் இணைந்து அடிக்கடி சோதனை நடத்தி ரயில் மூலம் கடத்தல் நடைபெறுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.
ஆனால் சிறப்பு குழுக்கள் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் செங்கோட்டை வழியாக பஸ்கள் மற்றும் லாரிகள் மூலம் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் ஜோராக நடந்து வருகிறது.
தற்போது அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ரூபாய் அரிசியும் படு ஜோராக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications