மாணவன் மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து போராட்டம்
பரமக்குடி: பரமக்குடி அருகே மர்மமான முறையில் இறந்த பள்ளி மாணவனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக முஸ்லீம் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பரமக்குடி எமனேசுவரத்தைச் சேர்ந்தவர் ராஜா மஸ்தான்(15). கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாரி. கடந்த 18ம் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அவரது உடல் நேற்று காலை தண்றாதேவிப்பட்டிணம் வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த ராஜாவின் பெற்றோர், உறவினர்களும் முஸ்லீம் அமைப்புகளும் மருத்துவமனையில் குவிந்தனர். ராஜாவை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டம் செய்தனர்.
கைது செய்யும் வரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மறுத்து விட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து குளிர் சாதன பெட்டி வரவழைக்கப்பட்டு அதில் உடலை போலீஸார் வைத்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் ராஜாவின் உறவினர்களை அழைத்து சமரசம் செய்தனர். ஆனால் இரண்டாவது நாளாக ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து பரமக்குடி மேலப் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் தமுமுக, தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை, தேசிய லீக், உளமாக்கள் சபை ஆகிய அமைப்புகளில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அப்போது, இன்று மாலை 5 மணிக்குள் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் நாளை காலை 10 மணிக்கு எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து தாலுகா அலுவலகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் பரமக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications