லோக்சபா: பாஜக மூத்த தலைவர்களுக்கு சீட் மறுப்பு?
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் மூத்த தலைவர்களுக்குப் பதில் அதிக அளவில் இளையவர்களுக்கு சீட் தர பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக பல விதங்களிலும் தயாராகி வருகிறது. ஓட்டுக்கு நோட்டு, விலைவாசி உயர்வு, அணு ஒப்பந்தம், ராமர் பாலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகி வருகிறது.
தேர்தலில் பல மூத்த தலைவர்களுக்கு சீட் கொடுத்து லோக்சபாவில் வாதிடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்பு பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த முடிவை கட்சி மேலிடம் மாற்றிக் கொண்டுள்ளதாம்.
மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தற்போது ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் லோக்சபாவுக்கு வர விருப்பத்துடன் உள்ளனர்.
இருப்பினும் இவர்களை லோக்சபாவுக்கு கொண்டு வரும் முடிவில் பாஜக இல்லையாம். இவர்களுக்குப் பதில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் லோக்சபா உறுப்பினர்களாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். அப்போதுதான் கட்சிக்கு வலிமை கிடைக்கும் என கட்சி மேலிடம் கருதுகிறதாம்.
இது இளம் தலைமுறை தலைவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனராம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்











Click it and Unblock the Notifications