வடக்கில் நிலைகுலையும் விடுதலைப் புலிகள்-கருணா

போலி விசா மூலம் லண்டனுக்குச் சென்று கைதாகி சிறைவாசம் அனுபவித்து பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார் கருணா. கடந்த 2004ம் ஆண்டு இவர் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பையும் உருவாக்கினார். பின்னர் இது அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது.
கிழக்கில் நடந்த தேர்தலில் இந்தக் கட்சி, ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இக்கட்சியின் பிள்ளையன் தற்போது கிழக்கு மாகாண முதல்வராக உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிைலயில் கருணா அளித்துள்ள ஒரு பேட்டியில், வடக்கில் விடுதலைப் புலிகள் பலமிழந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை படைகள் முன்பை விட வலுவாக மாறியுள்ளன. அவர்களின் தாக்குதலை விடுதலைப் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
முன்பு போல எதிர்த்து நின்று தாக்குதல் நடத்த பிரபாகரனுக்கு வாய்ப்புகள் இல்லை. திடீர் தாக்குதல்களில் மட்டுமே அவர்களால் இனி ஈடுபட முடியும்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே முன்பை விட தற்போது நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் விடுதலைப் புலிகள் வலுவிழந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள அனைத்துப் பகுதிகளையும் விரைவில் ராணுவம் விடுவிக்கும்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளுக்குள் முன்பை விட அதி வேகமாக தற்போது ராணுவம் ஊடுறுவி வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அதிபர் ராஜபக்சே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிக உறுதியான முடிவுகளை எடுக்கிறார். இது மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் கருணா.
இந்த நிலையில், சமீபத்தில் பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபயா ராஜபக்சேவை கருணா சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து அவர் கோதபயாவுக்கு பல யோசனைகளைத் ெதரிவித்ததாக தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications