ஆப்கான்: பாகிஸ்தானுக்கான புதிய தூதர் கடத்தல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதர் அப்துல் காலிக் பராஹி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் அப்துல் காலிக் பராஹி. தற்போது பெஷாவரில் உள்ள ஆப்கன கவுன்சில் ஜெனரலாக உள்ளார். இவர் விரைவில் தூதர் பொறுப்பை ஏற்க இருந்தார்.
பெஷாவர் அருகே உள்ள ஹயதாபாத்தில் அவரது வீடு உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி அப்துல் காலிக் நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று திடீரென்று காரை மடக்கியது. டிரைவரை சுட்டுக் கொன்றுவிட்டு, அப்துல் காலிக்கை அதே காரில் கடத்திச் சென்றது.
அப்துல் காலிக் கடத்தப்பட்டதை பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரக பொறுப்பு அதிகாரி மஜ்னூன் குலூப் உறுதி செய்தார்.
அவரை கடத்திச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவில்லை. எந்த தீவிரவாத அமைப்பும் இதுகுறித்து பொறுப்பேற்கவில்லை.
அப்துல் காலிக் கடத்தப்பட்டதற்கும், அவரது டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு அமைச்சக அதிகாரி முகமது சாதிக் கூறுகையில், அப்துல் காலிக்கை பாதுகாப்புடன் விரைவில் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆப்கன் அரசுக்கும், அப்துல் காலிக் குடும்பத்தினருக்கும் உறுதி அளிப்பதாக கூறினார்.
தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கு இடமளிப்பதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அப்துல் காலிக் கடத்தப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பெஷாவர் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications