ஏர் உழவன் சின்னம் பறிப்பு: சுப்ரமணிய சுவாமியின் அப்பீல் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Janatha Logo
டெல்லி: சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான ஜனதாக் கட்சி முன்பு தேசியக் கட்சியாக இருந்து வந்தது. இக்கட்சியின் சின்னமாக ஏர் உழவன் சின்னம் இருந்து வந்தது. ஆனால் சின்னத்தை தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவைப்படும் எம்பி, எம்எல்ஏக்கள் பலம் சுவாமி கட்சிக்கு இல்லாததால் ஏர் உழவன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது. மேலும் அவரது கட்சிக்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய சுவாமி, சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் சுவாமியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சுவாமி.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் சுவாமி இனிமேல் ஏர் உழவன் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+