மதுரை இடைத்தேர்தல்-எதிர்த்து சிபிஎம் வழக்கு
மதுரை: மதுரை மாநகராட்சியின் 52வது வார்டு இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் வேட்பாளர் உதயசூரியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகராட்சி தேர்தலில் 52வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.
மாநகராட்சி துணை மேயர் மன்னன், கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமி ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அரிவாள், கத்தி, இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு, எதிர்கட்சி ஏஜெண்டுகளை வெளியேற்றிவிட்டு கள்ள ஓட்டுகளை போட்டனர்.
எங்கள் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் மகாலிங்கத்தை துணை மேயர் மன்னன் கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தினார். எங்கள் கட்சியைச் சேர்ந்த முருகனை, திமுக கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமியும், எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆஞ்சி என்பவரை வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்துவும் தாக்கினர்.
கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற மருது உள்ளிட்ட பலர் இத் தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்த புகார் தேர்தல் பார்வையாளர் கோபாலிடமும், மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications