அண்ணாவின் வார்த்தைகளை கருணாநிதி ஏற்க வேண்டும்: ராமதாஸ்
செஞ்சி: மது விலக்கு போராட்டம் நடத்துவோம். சட்டத்தை மீறுவோம். சிறை செல்வோம் என்று கூறிய அண்ணாவின் வார்த்தைகளை அவரது தம்பி கருணாநிதி ஏற்று நல்ல முடிவை தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செஞ்சியில் நடந்த பாட்டாளி மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தமிழகத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடிக்கும் பழக்கும் அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காதவர்களே இல்லை என்ற அவல நிலை உருவாகும். சமுதாயம் அழிவை நோக்கி செல்வது வேதனையாக இருக்கிறது.
வருமானத்தை எதிர்பார்க்காமல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகள் நடந்து வருகிறது.
இவர்களது வழிகாட்டியான அண்ணா, கடந்த 1968ல் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த அகில இந்திய பொது மதுவிலக்கு மாநாட்டில் பேசும்போது, மது விலக்கு தோல்வியடைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். சமூக பொருளாதாரத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அதற்கு பின்னால் தாய்மார்கள், குழந்தைகள் அழுகிற காட்சிதான் என் கண் முன் நிற்கிறது.
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று மது விலக்கு போராட்டம் நடத்துவோம். சட்டத்தை மீறுவோம். சிறை செல்வோம் என்றார்.
அண்ணாவின் தம்பி கருணாநிதி, அந்த நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். கள்ளுக் கடைகள் கூடாது என்று பெரியார் தனது தோட்டத்தில் இருந்து 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
நாகம்மை, பெரியாரின் தங்கை கண்ணம்மா ஆகியோரின் தலைமையில் மகளிர் போராட்டம் நடந்தது. 1971ல் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள். இப்போது மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது என்றார் ராமதாஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications